சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன்: ராமதாஸ் கண்டனம்

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன்: ராமதாஸ் கண்டனம்

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாங்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரின் 6 வயது மகள் கடந்த பிப்ரவரி மாதம் அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டாள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், பின்னர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் குண்டர் சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டு சிறையிலிருந்து அவருக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. இது எதேச்சையாக நடக்கவில்லை.
காவல் துறையினர் 90 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் தவறிவிட்டதால், அதைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்கி, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையும், ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டி குண்டர் சட்டத்திலிருந்தும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. சிறுமியை தஷ்வந்த் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இருப்பினும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல்துறை அதிகாரிகள் தவறியதில் ஏதோ மர்மம் இருக்கிறது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன் என்பது குறித்து காவல்துறை தலைவர் நிலையிலான அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com