தமிழகத்தில் ஜப்பான் தொழில் நகரம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி

தமிழகத்தில் ஜப்பான் நாட்டின் தொழில் நகரமும், மனிதவள மேம்பாட்டை வளர்த்தெடுப்பதற்கான நிறுவனமும் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நன்றி

தமிழகத்தில் ஜப்பான் நாட்டின் தொழில் நகரமும், மனிதவள மேம்பாட்டை வளர்த்தெடுப்பதற்கான நிறுவனமும் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
குஜராத் மாநிலம், காந்தி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய }ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் தமிழகத்துக்கான இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, ஜப்பான் தொழில் நகரமும், மனி
த வளத்தை வளர்த்தெடுப்பதற்கான நிறுவனமும் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளுக்காக, தமிழக மக்களின் சார்பிலும், எனது சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறிவிப்புகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, தேசத்தின் மேம்பாட்டுக்கும் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்யும் என்று தனது கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com