"தம்பிதுரை, ஜெயக்குமார் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கம்'

மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து மு.தம்பிதுரை, அதிமுக மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஜெயக்குமார் ஆகியோர் விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தூசி கே.மோகன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சி.ஏழுமலை புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் உள்ள பொள்ளாச்சி வி.ஜெயராமன் நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்பில் தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் ஜி.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஓ.எஸ்.மணியன் நீக்கப்படுகிறார். நாகை மாவட்டம் கட்சி அமைப்பு ரீதியாக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. நாகை வடக்கு மாவட்ட செயலாளராக எஸ்.செந்தமிழனும், தெற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.சந்திரமோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள செல்லூர் கே.ராஜு, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பேராசிரியர் மா.ஜெயபால் புதிய செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று தனது அறிவிப்பில் தினகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com