துரோகத்துக்கு முடிவு கட்டுவோம்: டிடிவி தினகரன் பேட்டி

ஆட்சியாளர்கள் செய்யும் துரோகத்துக்கு சட்டப் பேரவையில் முடிவு கட்டுவோம் என்று அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
துரோகத்துக்கு முடிவு கட்டுவோம்: டிடிவி தினகரன் பேட்டி

ஆட்சியாளர்கள் செய்யும் துரோகத்துக்கு சட்டப் பேரவையில் முடிவு கட்டுவோம் என்று அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் அவரது இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
எங்களால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. இவர்களை எதிர்த்த பன்னீர்செல்வத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளனர். இதைத்தான் கலியுகம் என்பர்.
கலியுகத்திலேதான் இந்தத் துரோகம் எல்லாம் நடைபெறும். இன்னும் ஒரு வாரத்தில் நாங்கள் சட்டப் பேரவையில் இந்த துரோகத்துக்கு எல்லாம் முடிவு விழா நடத்தி விடுவோம். அவர்கள் வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்து விட்டது.
அ.தி.மு.கவின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவாகும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால்...: அண்மையில் நடைபெற்றது அ.தி.மு.க. (புரட்சித்தலைவி, அம்மா) அணிகளின் பொதுக் கூட்டம். அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கிடையாது. நாங்கள் பல பொதுக்குழு உறுப்பினர்களை மாற்றியுள்ளோம்.
எனவே, அங்கு சென்றவர்கள் அ.தி.மு.க (அம்மா) அணியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல. தனது கையில் அதிகாரமும், காவல்துறையும் இருக்கும் தைரியத்தில் முதல்வர் பழனிசாமி செயல்படுகிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அனைவரும் கீழே வந்து விடுவார்கள்.
தேர்தல் ஆணையத்திடம் முறையாக எங்களது பெயரைக் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என மனு கொடுத்துள்ளோம். பொதுக் குழுவில் கலந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.
துணைப் பொதுச்செயலாளருக்கு அதிகாரம்: கட்சியைப் பொருத்தவரை பொறுப்புகளில் இருந்து நீக்குவதற்கும் மீண்டும்
சேர்ப்பதற்கும் பொதுச் செயலாளருக்கே அதிகாரம் உண்டு. இப்போது அவரின் சார்பாக துணைப் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உள்ளது.
இவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்திடம் சென்று துணைப் பொதுச்செயலாளராக என்னை நியமித்திருப்பதாகக் கூறிவிட்டு, இப்போது அப்படி ஒரு பொறுப்பே இல்லை, அந்த நியமனம் செல்லாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம். 10 நாள்கள் முன்பு வரை ஊழல் ஆட்சி என்று கூறிவிட்டு இப்போது ஒருவர் துணைமுதல்வராக உள்ளார். எங்கள் எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகம் வந்தால் எடப்பாடி அணியில் சேர்ந்து விட்டதாகக் கூறுகின்றனர்.
இந்த ஆட்சிக்கு அதிகபட்சம் 30-ஆம் தேதிக்குள் முடிவு வந்து விடும் என்றார் டிடிவி தினகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com