ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்தும்  முடியாமல் தோற்றவர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பல வழிகளில் முயற்சித்தம், முடியாமல் மு.க.ஸ்டாலின் தோற்று விட்டார் என வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் பேசினார்.

தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பல வழிகளில் முயற்சித்தம், முடியாமல் மு.க.ஸ்டாலின் தோற்று விட்டார் என வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவர் பேசியதாவது: 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த போது, சசிகலா கூறிய காரணங்களையே நாட்டு மக்களிடம் எடுத்துக் கூறினோம். 
75 நாள்களாக சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை, சசிகலா குடும்பத்தினர் நீங்கலாக வேறு யாராலும் சந்திக்க முடியவில்லை. 
கடுமையான நோய் தொற்று ஏற்பட்டு விடும் எனக் கூறி மத்திய அமைச்சர்கள், தமிழக ஆளுநர் உள்ளிட்டோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அந்த நோய் தொற்று ஏன் ஏற்படவில்லை என்பதற்கு சசிகலா தான் விளக்கம் கூற வேண்டும். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு பின்னர் முதல்வர் பதவியை கைப்பற்ற டிடிவி.தினகரன் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதிமுக தொண்டர்கள் விழித்துக் கொண்டதால், தினகரனிடமிருந்து தமிழகமும், அதிமுகவும் தப்பி விட்டது. சாட்டையை சுழற்றுவேன் என்கிறார் தினகரன். சாட்டையை எடுப்பதற்கு எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. 
ஆட்சியைக் கைப்பற்ற மு.க.ஸ்டாலின் பல்வேறு வழிகளில் முயன்று தோற்று விட்டார். தற்போது, அவரது மருமகன் சபரீசன் மூலம் தினகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அயல் நாட்டிலிருந்து வரும் பணத்தின் மூலம் அதிமுக ஆட்சியை கலைக்க திட்டமிட்டுள்ளனர். 
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த (அதிமுக) இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com