எலிவால் அருவியில் தண்ணீர்

கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் எலிவால் அருவியில் தண்ணீர் கொட்டுவதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் எலிவால் அருவியில் சனிக்கிழமை கொட்டும் தண்ணீர்.
கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் எலிவால் அருவியில் சனிக்கிழமை கொட்டும் தண்ணீர்.

கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் எலிவால் அருவியில் தண்ணீர் கொட்டுவதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கொடைக்கானல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து மறுகால் வெளியேறியது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின.

மேலும் எலிவால் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதுடன், இங்கிருந்து மஞ்சளாறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளுக்கு அந்த தண்ணீர் செல்கிறது. இந்த அருவியில் தண்ணீர் கொட்டுவதை வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானல் வரும் வழியில் உள்ள டம்டம் பாறை என்ற இடத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: இந்த எலிவால் அருவிக்கு செல்ல வேண்டுமானால் மூலையாறு பகுதியிலிருந்து வனப் பகுதி வழியாக 12 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டும். மிகவும் சவாலான கடினமான பாதையாகும். ஆனால் இந்த இடத்திற்கு அருகில் ஆதிவாசிகள் வசித்து வருகின்றனர். இந்த அருவி சுமார் 975 அடி உயரத்தில் இருந்து விழுந்து தரைப்பகுதிகளிலுள்ள பல்வேறு நீர் நிலைகளுக்குச் செல்கிறது. இந்தியாவிலுள்ள உயரமான அருவிகளில் இதுவும் ஒன்று. ஆனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தால் மட்டுமே இதன் அழகை காண முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com