கோயில்களில் தீபம் ஏற்ற கலப்பட நெய்? இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தீபம் ஏற்றுவதற்கு கலப்பட நெய் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தீபம் ஏற்றுவதற்கு கலப்பட நெய் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் புளியூரைச் சேர்ந்த ஆனந்தவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் உள்ள கோயில்களிலும், கோயில் வளாகங்களிலும் விற்கப்படும் நெய் தீபங்களில் கலப்படங்கள் உள்ளன. நெய்க்கு பதிலாக டால்டா, கலப்பட எண்ணெய், விலங்கு கொழுப்பு கலந்த எண்ணெய் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட தீபங்கள், நெய் தீபம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. கோயிலுக்குள் இவற்றைப் பயன்படுத்தும்போது கோயில் வளாகத்தில் கார்பன் டை ஆக்ûஸட், கார்பன் மோனாக்ûஸட் உள்ளிட்டவை அதிகரித்து கோயிலின் சுற்றுப்புறமும், பக்தர்களின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. மேலும், கோயில் வளாகத்திற்குள் பிளாஸ்டிக் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
எனவே கோயில் வளாகத்திற்குள் தீபத்திற்காக தூய நெய் விற்கவும், கோயில் வளாகங்களை பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தீபம் ஏற்றுவதற்கு கலப்படம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com