மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிமையாக இல்லை: முதல்வர் பழனிசாமி பேச்சு

மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிமையாக இல்லை என்றும் மத்திய அரசுடன் இணக்கமான சூழல் இருந்தால் தமிழக அரசின் திட்டங்களுக்கு
மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிமையாக இல்லை: முதல்வர் பழனிசாமி பேச்சு


நாமக்கல்: மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிமையாக இல்லை என்றும் மத்திய அரசுடன் இணக்கமான சூழல் இருந்தால் தமிழக அரசின் திட்டங்களுக்கு நிதியுதவி கிடைக்கும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

தமிழக அரசு சார்பில் நாமக்கல் அருகே கருப்பட்டிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில்முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று, ரூ. 382.94 கோடி மதிப்பில் 32 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.332.25 கோடி மதிப்பில், 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், 29,039 பயனாளிகளுக்கு, ரூ.188.01 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது, அதிமுக என்ற இரும்பு கோட்டையை யாராலும் அசைக்க முடியாது. சிலர் திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை கலைக்கலாம் என கனவு காண்கிறார்கள், அது நடக்காது. ஒரு சிலர் திமுகவை நம்புகின்றனர். அவர்கள் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்திருகின்றனர். நாங்கள் பொது மக்களையும், தொண்டர்களையும் மட்டுமே நம்புகிறோம்.

வல்லரசு நாட்டில் கூட மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி (லேப்டாப்) வழங்கப்படவில்லை. தமிழத்தில் மட்டும் தான் வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவின் வழியிலான அதிமுக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஏதாவது ஒரு போராட்டத்தை அறிவிக்கிறார்கள். போராட்டத்தால் அரசை ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சி நீடிக்காது எனக் கூறிய எதிர்க்கட்சி தலைவரின் பேச்சை எல்லாம் தகர்த்து அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிலர் மத்திய அரசுக்கு நாங்கள் கூஜா தூக்குவதாகவும், அடிமையாக இருப்பதாகவும் பேசுகின்றனர். அதிமுக ஆட்சியில் எந்த ஒரு குறையையும் காண முடியாது. மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிமையாக இல்லை. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்பட்டால்தான் தமிழக அரசின் திட்டங்களுக்கு நிதியுதவி கிடைக்கும் என்று கூறினார்.

நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியில் நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கும் ரூ.185 கோடி மதிப்பில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 125 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு-நாமக்கல் 4 வழிச்சாலை, ரூ.64 கோடி மதிப்பில் கணவாய்ப்பட்டி முதல் மோகனூர் வரை விரிவாக்கம் செய்து முடிக்கப்பட்ட சாலைப்பணிகளைத் திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com