மனித இயல்புகளை சொல்வதுதான் இலக்கியம்: கி.ராஜநாராயணன்

மனித இயல்புகளைச் சொல்வதுதான் இலக்கியம் என எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தெரிவித்தார்.

மனித இயல்புகளைச் சொல்வதுதான் இலக்கியம் என எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரி இலக்கிய வெளி சார்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 95-ஆவது பிறந்த நாள் விழா காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கி.ரா. எழுதிய மற்றும் அவர் தொடர்பான நூல்கள் வெளியிடப்பட்டன. மேலும், கி.ரா. பற்றிய கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. அவரது வாழ்வு தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக "கரிசல் விருதுகள் 2017' வழங்கப்பட்டன. கரிசல் இலக்கிய விருது (2017) தளம் - இலக்கியக் காலாண்டு இதழுக்கு வழங்கப்பட்டது. கரிசல் விருது எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்டது.
பின்னர், கி.ரா. வாசகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
சாதியை உண்டாக்கியவர்கள் வருத்தப்படும் வகையில் ஏதும் நடக்காத வரையில் அதை ஒழிக்க முடியாது. சிலர் எல்லா வீடுகளிலும் சாப்பிடுவார்கள். ஆனால், தங்கள் வீட்டுப் பெண்ணை இதர சமூகத்தினருக்குத் திருமணம் செய்து தர மறுப்பார்கள். உண்மையில் திருமணம்தான் இடிக்கிறது. எனவே திருமணத்தை நிறுத்துங்கள்.
பிரான்ஸ் நாட்டில் திருமணம் செய்யாமல் குழந்தைகளுடன் வாழும் போக்கு உள்ளது. நாட்டை நிர்வகிப்பவர்களே அப்படித்தான் இருக்கிறார்கள். அதனால் திருமணத்தை நிறுத்தினால்தான் இந்திய சமூகத்துக்கு விடிவு காலம் வரும்.
நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிக்கும்போது பல்வேறு இடையூறுகள் வரும். விரசமான நாட்டுப்புறக் கதைகளையும்கூட சேகரிப்பேன்.
என்னைப் பொருத்தவரையில் மனித இயல்புகளைச் சொல்வதுதான் இலக்கியம். அவ்வாறு தைரியமாகச் சொல்வதை வரவேற்பது அவசியம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com