விபத்துக்குள்ளான பார்சல் லாரியிலிருந்து திருடப்பட்ட 70 செல்லிடப்பேசிகள் பறிமுதல்: 2 பேர் கைது

சேலத்தில் விபத்துக்குள்ளான பார்சல் லாரியில் இருந்து திருடப்பட்ட 170 செல்லிடப்பேசிகளில் 70 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்த போலீஸார், இருவரை கைது செய்தனர். 

சேலத்தில் விபத்துக்குள்ளான பார்சல் லாரியில் இருந்து திருடப்பட்ட 170 செல்லிடப்பேசிகளில் 70 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்த போலீஸார், இருவரை கைது செய்தனர். 
கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி சென்னையில் இருந்து கோவைக்கு சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 170 செல்லிடப்பேசிகளை ஏற்றிச் சென்ற மினி பார்சல் லாரி, சேலம் அருகே குமரகிரி பகுதியில் விபத்துக்குள்ளானது. 
அப்போது, கூரியர் பார்சல் லாரியில் பின்புறம் கதவை உடைத்து அதிலிருந்த செல்லிடப்பேசி பார்சலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து கூரியர் ஏஜென்சி நிறுவனம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருடுபோன செல்லிடப்பேசிகளின் ஐஎம்இஐ எண்ணை வைத்து ஆய்வு நடத்தியதில் அந்த செல்லிடப்பேசிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. 
திருடப்பட்ட செல்லிடப்பேசிகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டதை அறிந்த போலீஸார், அந்த செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தி வந்தவர்களிடம் இருந்து ஒவ்வொன்றாக பறிமுதல் செய்தனர். 
இதுவரை 70 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்த போலீஸார், பார்சல் லாரியில் இருந்து செல்லிடப்பேசிகளைத் திருடியதாக அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (40), தங்கராஜ் (45) ஆகியோரை கைதுசெய்தனர். 
அதேநேரத்தில் மும்பை, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் செல்லிடப்பேசிகளை மீட்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com