நாமக்கல் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை: பி.தங்கமணி

நாமக்கல் மாவட்டம், அ.தி.மு.க.வின் கோட்டை என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி.
நாமக்கல் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை: பி.தங்கமணி

நாமக்கல் மாவட்டம், அ.தி.மு.க.வின் கோட்டை என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முன்னிலை வகித்து அவர் மேலும் பேசியது: 
கடந்த 1984இல் எம்.ஜி.ஆர். பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலைக்கு வந்தார். அப்போது 23 வயது இளைஞராக இருந்த என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் சுவர் ஏறிக் குதித்து சென்று எம்.ஜி.ஆரை பார்த்தேன்.
குடிக்கத் தண்ணீர் இல்லை, காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என பள்ளிபாளையம் லட்சுமண முதலியாரை நேரில் சந்தித்த எம்.ஜி.ஆர். கர்நாடகா முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவிடம் பேசி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதை தொடர்ந்து, பள்ளிபாளையம் வந்த ராமகிருஷ்ண ஹெக்டே, லட்சுமண முதலியார் கேட்டுக் கொண்டதை அடுத்து காவிரியில் தண்ணீர் விட்டார். 
நாமக்கல் மாவட்டம், அதிமுக கோட்டை, திமுக ஆட்சியைக் கலைக்க நினைக்கிறது. துரோகிகளோடு சேர்ந்து துரோகம் செய்பவர்களை, ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது. எதற்காக ஆட்சியைக் கலைக்க நினைக்கின்றனர். சட்டத்தின் ஆட்சி நடக்கிறது, நீரா அனுமதி, குடிமரத்துத் திட்டம், வர்தா புயல் வந்தபோது, உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது. அதனால் ஆட்சியைகக் கலைக்க நினைக்கின்றனரா?
சிலிப்பர் செல் எங்களிடம் இல்லை, அவர்களிடம் தான் உள்ளனர், 19 பேரை வைத்துக் கொண்டு ஆட்சியைக் கலைக்க நினைக்கின்றனர். திமுகவுடன் சேர்ந்து, நமது இயக்கத்தை அழிக்க, ஒழிக்கப் பார்க்கின்றனர். ஜெயலலிதாவின் ஆன்மா நம்மிடம் இருக்கிறது,. எத்தனை துரோகிகள் வந்தாலும் இயக்கத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com