பிரதமருக்கு பிறந்தநாள் - ஆளுநர், முதல்வர் வாழ்த்து

பிரதமருக்கு பிறந்தநாள் - ஆளுநர், முதல்வர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதல்வர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதல்வர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ்: நாட்டுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறந்த திட்டங்கள் காரணமாக உலக வரைபடத்தில் சிறந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. "மேக் இன் இந்தியா' திட்டம் சர்வதேசச் சந்தையில் ஒரு புதிய பாதையை உருவாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட சிறந்த திட்டங்களை வகுத்து வரும் உங்களுக்கு நீண்ட, நல்ல உடல் நலத்தை இறைவன் வழங்கவேண்டும் என இந்தப் பிறந்த நாளில் வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்ற நல்ல உடல் நலத்தையும், பலத்தையும் இறைவன் வழங்க வாழ்த்துகிறேன். தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கடிதம் மூலம் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்: திமுக தலைவர் கருணாநிதி சார்பிலும், திமுக சார்பிலும், எனது சார்பிலும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நலத்தையும் பெற்று வாழ வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com