மதுரை வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீர்: மாநகராட்சி ஆணையரின் அதிர்ச்சி அறிக்கை!

மதுரை வைகை ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கட்டிடங்களின் கழிவுநீர் பற்றிய மாநகராட்சி ஆணையரின் அதிர்ச்சி அறிக்கை, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீர்: மாநகராட்சி ஆணையரின் அதிர்ச்சி அறிக்கை!

மதுரை: மதுரை வைகை ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கட்டிடங்களின் கழிவுநீர் பற்றிய மாநகராட்சி ஆணையரின் அதிர்ச்சி அறிக்கை, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை வைகை ஆற்றில் பல கட்டிடங்கள் வெளிவிடும் கழிவு நீர் நேரிடையாக கலப்பதாகவும், எனவே இதனைக் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உத்தரவிடுமாறும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செயயப்பட்டது.

இந்த மனு இன்று விசாரைணக்கு வந்த பொழுது மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ் சங்கர் அறிக்கை ஒன்றை நீதிமன்றதில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மதுரை வைகை ஆற்றில் 363 கட்டிடங்களின் கழிவுநீர்  நேரடியாகக் கலக்கிறது. இந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com