திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று அவசர ஆலோசனை

திமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.19) கூட உள்ளது.
திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று அவசர ஆலோசனை

திமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.19) கூட உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திரும்பப் பெற்றனர். அதைத் தொடர்ந்து 18 பேரையும் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். திமுகவின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்குமாறு சட்டப்பேரவை திமுக கொறடா சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார்.
பெரும்பான்மை நிரூபிப்பு: தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் எனத் தெரிகிறது. 
அப்படி உத்தரவிட்டால், திமுக உறுப்பினர்கள் பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.
குட்கா விவகாரம்: சட்டப்பேரவையில் குட்காவைக் காண்பித்த திமுக உறுப்பினர்கள் 21 பேருக்கு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கை திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேரையும் தகுதி நீக்கம் செய்வதற்காகத்தான் என்று திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீதும் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க அக்.12-ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனினும், உயர்நீதிமன்றத்தின் கெடுவுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல் திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், இது வழக்கமான கூட்டம்தான். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டது குறித்தும் கூட்டத்தில் விவாதிப்போம் என்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் புதன்கிழமை (செப்.20) நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸின் 8 சட்டப்பேரவை உறுப்பினர்களும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com