புதுவையில் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை 6 மாதங்களுக்கு பின் அமல்படுத்தப்படும்: அமைச்சர் கந்தசாமி

புதுவையில் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை 6 மாதங்களுக்கு பின் அமல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை 6 மாதங்களுக்கு பின் அமல்படுத்தப்படும்: அமைச்சர் கந்தசாமி

புதுவையில் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை 6 மாதங்களுக்கு பின் அமல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் அதிகளவில் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. இதனால் சுற்று சூழல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களால் கெடு அதிகமாக இருப்பதால், புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய  உள்ளோம். இதற்காக தொழிற்சாலைகளுக்கு  6 மாதங்கள் கால கெடு அளிக்கபடும்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தி விட்டு அறிவிக்கபடும். பிளாஸ்டிக் பொருள்களால் கேடு அதிகம் விளைவிக்கிறது. மக்கள் நலனைக் கருதி பிளாஸ்டிக் பொருள்களை விற்க தடை விதிக்கப்படுகிறது.

6 மாத கால அவகாசம் வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று ஏற்பாடுகள், ரசாயன கலப்பு இல்லாமல் மக்களுக்கு தேவையானவை செய்யப்படும்.

6 மாதங்களுக்கு பின்னர் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என்றார் கந்தசாமி.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய மிக மெல்லிய 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை புதுவையில் பயன்படுத்த கடந்த 2009 ஆண்டில் அரசு தடை விதித்தது. இந்த தடையை கண்காணிக்க 18 பேர் கொண்ட குழுவையும் அரசு உருவாக்கியது.

இந்த தடை உத்தரவு நடைமுறையில் இருந்த போதும் புதுவையில் தொடர்ந்து 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் புழக்கத்தில் இருந்து வருகிறது. இத்தகைய பைகளை சிலர் தொடர்ந்து உற்பத்தி செய்தும் வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் இடங்களில் சோதனை நடத்தி சீல் வைத்தாலும் பலன் கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com