பெரும்பான்மையை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ.க்களே போதும்

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116-ஆகக் குறைந்தது. அதே சமயம், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 108 எம்.எல்.ஏ.,க்களே போதும்.
பெரும்பான்மையை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ.க்களே போதும்

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116-ஆகக் குறைந்தது. அதே சமயம், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 108 எம்.எல்.ஏ.,க்களே போதும்.
தமிழக சட்டப் பேரவையில் 234 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்; அவர்களில் 134 பேர் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 116-ஆகக் குறைந்துள்ளது.
டிடிவிக்கு எத்தனை பேர்?: டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம், அவருக்கு ஆதரவு அளித்து வரும் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகிய 5 பேர் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவுள்ளனர் என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே தெரியவரும். அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காத நிலையில், அந்தக் கட்சிக்கான ஆதரவு எண்ணிக்கை 111 ஆகக் குறையும்.
பெரும்பான்மையே குறையும்: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தமிழக சட்டப் பேரவையில் மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 216-ஆகக் குறைந்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது, மொத்தமுள்ள 216 எம்.எல்.ஏ.க்களின் (தகுதி நீக்கத்துக்குப் பிறகு) எண்ணிக்கையில் பாதியளவு பெற்றிருந்தால் போதும். அதன்படி, பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 108-ஆகக் குறைந்துள்ளது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம், 5 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிக்காத பட்சத்திலும், அதிமுகவுக்கு 111 பேரின் ஆதரவு இருக்கும். அதேசமயம், பெரும்பான்மையை நிரூபிக்க 108 பேரின் ஆதரவு இருந்தாலே போதும். 
அந்த வகையில், சட்டப் பேரவையில் இந்த வாரமோ அல்லது அடுத்த வாரத்திலோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால், 111 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு பெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதாவது பெரும்பான்மை எண்ணிக்கையைவிட கூடுதலாக 3 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவைப் பெற்று வென்றதாக அறிவிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை நிகழ்வுகள், எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகளைப் பொருத்து மாறுபடும் சூழலும் உருவாகும்.
பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை இப்போதைய சூழல்படி 108 ஆகும். இந்த எண்ணிக்கை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு வரை எப்படி வேண்டுமானாலும் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது, மேலும் எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, வேறு வகையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டாலோ பெரும்பான்மைக்குத் தேவைப்படும் எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கையில் மாறுபாடுகள் ஏற்படக் கூடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com