ரூ. 90 கோடி மதிப்பில் காய்ச்சல் மருந்துகள் இருப்பு உள்ளது: சுகாதாரத் துறை செயலர் தகவல்

தமிழகத்தில் ரூ.90 கோடி மதிப்பில் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தூய்மையே சேவை இயக்கம் சார்பில் தூய்மையான மருத்துவமனைகள் தரமான சேவைகள் பணிகளுக்கான உபகரணங்களையும் வாகனங்களையும் தொடங்கி வைத்தார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
தூய்மையே சேவை இயக்கம் சார்பில் தூய்மையான மருத்துவமனைகள் தரமான சேவைகள் பணிகளுக்கான உபகரணங்களையும் வாகனங்களையும் தொடங்கி வைத்தார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

தமிழகத்தில் ரூ.90 கோடி மதிப்பில் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாடு முழுவதும் தூய்மையே சேவை இயக்கம் என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மருத்துவக் கல்லூரியில் துôய்மையே சேவை திட்டம் தொடர்பான நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: தமிழகத்தில் 36 அரசு மருத்துவமனைகளில் மட்டும் தற்போது ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். மேலும் 38 அரசு மருத்துவனைகளில் ஒப்பந்த முறையில் துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர். 
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், ஓமலுôர், வாழப்பாடி ஆகிய ஓரிரு பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. விரைவில், முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். ரத்த அணுக்களைப் பரிசோதிக்க ரூ. 23.50 கோடி செலவில் 837 மையங்கள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் அமைக்கப்படும் என்றார்.
சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,''மழைக்கால காய்ச்சலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் சுற்றுபுறத்தைத் துôய்மையாகப் பராமரிப்பது அவசியம். காய்ச்சலைக் கட்டுப்படுத்த ரூ.90 கோடி மதிப்பிலான மூன்று மாதத்துக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன என்றார். 
சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com