5 மாவட்டங்களில் மனநல சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மனநல சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
5 மாவட்டங்களில் மனநல சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மனநல சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தூய்மையே சேவைத் திட்டத்தின் ஒருபகுதியாக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இந்த இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:
மக்கள் நோய்களின்றி வாழ்வதற்கு சுற்றுப்புறத் தூய்மை மிகவும் அவசியம். தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மையான மருத்துவமனைகள் தரமான சேவைகள் என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தூய்மையே சேவைத் திட்டப் பணிகளில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட மனநல நோயாளிகள் சிகிச்சை முடிந்து நலமுடன் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். 
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை நோயாளிகள் மலர்க்கொத்து தயாரித்தல், கூடை பின்னுதல், ரொட்டிதயாரித்தல் ஆகியவற்றுடன் தோட்டங்கள் பராமரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு யோகா மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மனநல சேவையில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 32 மாவட்டங்களிலும் மாவட்ட மனநலத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வேலூர், திருப்பூர், தேனி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் மனநல சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் தமிழகத்தில் மனநல சேவை மேலும் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ, மனநல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சாந்தி நம்பி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com