'உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம்'

தொகுதிகள் மறுசீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிந்த  பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக, இதுதொடர்பான விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக
'உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம்'

தொகுதிகள் மறுசீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிந்த  பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக, இதுதொடர்பான விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு  உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சுழற்சி முறையிலான வார்டுகளின் எண்ணிக்கை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை நீதிமன்றம் ரத்து செய்தது. அதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
தொகுதி மறுசீரமைப்பு: இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக, தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான சட்ட மசோதாவும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
விதியில் திருத்தம்?: தொகுதி மறுசீரமைப்பு செய்யாமலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான விதிகள் நடைமுறையில் இருந்தன. ஆனால், இந்த விதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறுகையில், 'தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாமல் தேர்தலை நடத்துவதற்கான விதிகள் நடைமுறையில் இருந்தன. இந்த விதிகளின்படி, தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றாலும் கடந்த கால விவரங்களின் அடிப்படையில் தேர்தலை நடத்த வாய்ப்பு இருந்தது.
ஆனால், தற்போது அந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.  எனவே, தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்' என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், உள்ளாட்சித் தேர்தல்கள் இப்போதைக்கு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com