எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவியின் யோகாவை ரசித்த முதல்வர்

நாகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சீர்காழி மாணவி செய்த யோகாவை  தமிழக முதல்வர் காத்திருந்து ரசித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவியின் யோகாவை ரசித்த முதல்வர்

நாகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சீர்காழி மாணவி செய்த யோகாவை  தமிழக முதல்வர் காத்திருந்து ரசித்தார்.

நாகப்பட்டினத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் இறுதியாக மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் நன்றியுரை  நிகழ்த்தினார். அப்போது அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழக முதல்வரிடம் தாய்லாந்தில் யோகா போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்ற சீர்காழி மாணவி சுபானாவை  அறிமுகப்படுத்தி, யோகா செய்து காட்ட விரும்புவதாக கூறினார்.

அப்போது நாகை மாவட்ட ஆட்சியர் நன்றியுரையை முடித்து விட்டார். எனினும் மாணவிக்காக மேடையில் அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள், சில அடி பின்னோக்கி நகர்த்தப்பட்டு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீண்டும் அமர்ந்தனர்.

பின்னர் மாணவி அங்கு யோகா நிகழ்த்தினார். மாணவி செய்த யோகா நிகழ்வுகளுக்கு  முதல்வர் உள்ளிட்ட அனைவரும்  ரசித்தபடி  கைதட்டி  உற்சாகப்
படுத்தினர்.  கூட்டம்  முடிவடைந்த பிறகும்  மாணவிக்காக  சுமார்   20  நிமிடங்களுக்கு மேல்  மேடையில்  முதல்வர்  வீற்றிருந்தது  பார்வையாளர்களிடையே  மகிழ்ச்சியை   ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com