சேலத்தில் 2 ஆயிரம் டிவிடிக்கள் பறிமுதல்: தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் நடவடிக்கை

சேலத்தில் தனியார் டிவிடி கடையில் இருந்து 2 ஆயிரம் புதிய திரைப்படங்களின் டிவிடிக்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் 2 ஆயிரம் டிவிடிக்கள் பறிமுதல்: தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் நடவடிக்கை

சேலத்தில் தனியார் டிவிடி கடையில் இருந்து 2 ஆயிரம் புதிய திரைப்படங்களின் டிவிடிக்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் துப்பறிவாளன், மகளிர் மட்டும், விவேகம் உள்ளிட்ட புதிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்தத் திரைப்படங்கள் சேலத்தில் அனுமதியின்றி டிவிடிக்களாகத் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புகார் சென்றதைத் தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சேலம் நிர்வாகிகள், சேலம் மாநகரப் பகுதியில் உள்ள தனியார் டிவிடி கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில், சேலம் காந்தி சாலை பகுதியில் உள்ள கடையில் சேலம் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சோதனை நடத்திய போது, அங்கு திரைக்கு வந்து சில தினங்களே ஆன புதிய திரைப்படங்களான துப்பறிவாளன், மகளிர் மட்டும், விவேகம் உள்ளிட்ட திரைப்பட டிவிடிக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய திரைப்படங்களின் டிவிடிக்களை பறிமுதல் செய்து, திருட்டு விடியோ ஒழிப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் சாய் கிருஷ்ணன் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com