அக்.1-இல் லயோலா முன்னாள் மாணவர் மாநாடு

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலக மாநாடு, சென்னையில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலக மாநாடு, சென்னையில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தரும், லயோலா முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவருமான ஜி.விசுவநாதன், கல்லூரி முதல்வர் அருட்தந்தை எம்.ஆரோக்கியசாமி சேவியர், முன்னாள் மாணவர் சங்கத்தின் இயக்குநர் அருட்தந்தை ஏ.தாமஸ் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
கடந்த 1925 -ஆம் ஆண்டு லயோலா கல்லூரி சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர் உலக மாநாடு கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தச் சங்கத்தில் 52 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அக்டோபர் 1 -ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் முன்னாள் மாணவர்களான திரையுலகப் பிரபலங்கள், நடிகர்கள் பிரபு, ஜெயம் ரவி, அருண்விஜய், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அக்டோபர் 2 -ஆம் தேதி முன்னாள் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஷியாம் கோத்தாரியின் நினைவுச் சொற்பொழிவு நடைபெறும். கத்தார் நாட்டிலுள்ள டோஹா வங்கியின் தலைமை செயல் இயக்குநர் ஆர்.சீத்தாராமன் சொற்பொழிவாற்ற உள்ளார்.
அதைத்தொடர்ந்து, ஓய்வுபெற்ற பேராசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக முன்னாள் முதல்வர்கள், செயலாளர்கள், லயோலா கல்லூரியில் படித்து பல்வேறு துறைகளில் கோலோச்சிக் கொண்டிருப்போர் ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் முன்னாள் மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com