அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை விரைவில் கூட்டுவேன்: டிடிவி தினகரன் பேட்டி

அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை விரைவில் கூட்டுவேன் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை விரைவில் கூட்டுவேன்: டிடிவி தினகரன் பேட்டி

அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை விரைவில் கூட்டுவேன் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடி தூக்கிக்கொண்டு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சில தினங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கார்நாடக மாநிலம் கூர்க்கில் தங்கவைக்கப்பட்டுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் இன்று தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறுகையில், அதிமுகவை மீட்கவே நாங்கள் கூர்க்கில் தனது ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவியே முக்கியம் என கருதாமல் எங்கள் ஆதரவாளர்கள் கட்சியை மீட்பதற்காகவே போராடி வருகின்றோம்.

ஓபிஎஸ் உடன் சேர்ந்து ஈபிஎஸ் கூட்டியது அதிமுக அம்மா அணியின் பொதுக்குழு அல்ல. உண்மையான அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை  விரைவில் கூட்டுவேன்.

முதல்வர் பழனிசாமி அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. பழனிசாமி அரசு கலைக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
முதல்வர் பழனிசாமி அரசு இனியும் தொடரக் கூடாது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. 

வி.கே. சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அனுமதித்துள்ளது. வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளராக பதவி ஏற்க கேட்டுக்கொண்டதே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்தான். ஆட்சியும், கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்ற தம்பிதுரை தான் கூறினார். இரட்டை இலையை முடக்கிய ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய தினகரன் அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன் பதவிக்காக மாறி மாறி பேசி வருகிறார்.

அமைச்சர்கள் சுய நலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காவே எங்களை எதிர்க்கின்றனர். பதவிக்காக சொந்த மனைவி, குழந்தைகளை கூட இல்லை என கூறுவார்கள். மருத்துவமனையில் ஒரு கட்டத்திற்கு பின் ஜெயலலிதாவைப் பார்க்க வி.கே. சசிகலாவே அனுமதிக்கப்படவில்லை.
 
ஆட்சி போனால் அமைச்சர்கள் இருக்கும் இடமே தெரியாது. கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் உண்மை தெரியும். தேர்தல் நடைபெற்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் அமோக வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com