ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: மன்னிப்பு கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: மன்னிப்பு கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய் சொன்னோம்' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: 

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் அவரை நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டதாகவும் அப்போது பொய் சொன்னோம். அதற்காக இப்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம். ஆனால், உண்மையிலேயே யாருமே பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. ஏன் பார்த்தகாக கூறினோம் என்றால், குடும்பத்தில் எப்படி சண்டை வந்தால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியக்கூடாது என ரகசியமாக பேசிக்கொள்வது போல், நம்முடைய கட்சியினுடைய ரகசியம் வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்றைக்கு பொய் சொன்னோம் என்பது தான் உண்மை இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். 

நான் இப்படி சொல்வதால் வடிவேல் சொல்வதுபோல் இது அந்த வாய், இந்த வாய் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இன்றைய நிலை, அன்றைக்கு இருந்த சூழ்நிலை நீ்ங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 

ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி வர வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, வெங்கய்யா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் சென்னை வந்து நிலமையை ஆராய்ந்து செல்வதற்காக அப்பல்லோ வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியின் அறையில் அமர்ந்துவிட்டு விசாரித்துவிட்டு தான் சென்றார்கள். நாங்களும் அவர்களை சுற்றி நின்றுக்கொண்டு நலமாக இருக்கிறார்கள் என்று கோஷம் போட்டோம் என்று தெரிவித்தார். 

மேலும், மாநிலத்தை காக்கும் ஆளுநர், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிற அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் வரவேற்பறையில் உட்கார்ந்துவிட்டு தான் சென்றார்களே தவிர, பார்க்க அனுமதிக்கவில்லை. காரணம் தொற்று நோய் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள். ஏன் அப்படி செய்தார்கள் என்றால் ஜெயலலிதாவை யாராவது பார்த்துவிட்டால் என்ன நடக்குது, என்ன நடந்தது, தான் எப்படி கொல்லப்படுகிறேன் என்ற செய்தியை சொல்லிவிடுவார் என்பதை நினைத்து யாரையும் பார்க்க அனுமதிக்காமல் வைத்திருந்தனர்.

மருத்துவமனையில் உள்ள செவிலியர், அறை உதவியாளர், மருத்துவர்கள் எல்லமாம் பார்க்கிறார்கள் நாங்கள் பார்க்க முடியவில்லை ஏன்? ஜெயலலிதா உயிரிழந்த பிறகு இறந்துவிட்டார்கள் என்று எங்களை எல்லாரையும் அழைத்துக்கொண்டு போய் காட்டுகிறார்கள். அங்கு இறந்தபிறகு மருத்துவமனையில் செய்யும் சடங்குகளை காட்டினவர்கள், இதை 75 நாட்களுக்கு முன்பு காட்டியிருந்தால், பேசியிருந்தால் எல்லாம் விவரமும் தெரிந்திருக்கும். ஏன் அவ்வாறு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். 

மேலும், இதைதான் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்துசென்ற போது சொன்னதை நாங்களும் அங்கீகரித்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விசாரணை கமிஷன் வைத்திருக்கிறார்கள். விசாரணையில் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் ஏன் சந்திக்கவிடவில்லை என்ற மர்மம் வெளிவரும். 

அன்று சொன்ன விஷங்கள், கட்சியின் உண்மைகள் வெளியே தெரிந்தால் அசிங்கம். காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் எல்லாரும் சேர்ந்து உண்மையை பேசமுடியவில்லை. சூழ்நிலை அதற்காக நீங்கள் எல்லாம் எங்களை மன்னித்துக்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com