டெங்கு காய்ச்சல்: ஐஐடி மாணவர் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர் வெள்ளிக்கிழமை (செப்.22) உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு பலியான பிரேம் அவினாஷ்
டெங்கு காய்ச்சலுக்கு பலியான பிரேம் அவினாஷ்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர் வெள்ளிக்கிழமை (செப்.22) உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பிரேம் அவினாஷ். அவர் சென்னை ஐஐடியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள நர்மதா விடுதியில் தங்கி படித்து வந்தார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனையில் டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு வேளச்சேரியில் உள்ள பிரபரல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், 'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாகக் காணப்பட்டதால், பல உறுப்புகள் செயலிழந்தன. தட்டணுக்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. சிறுநீரகம் செயலிழந்தது. இதனால் ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவர் பிரேம் அவினாஷ் உயிரிழந்தார்' என்றனர் அவர்கள்.
இதையடுத்து, பிரேம் அவினாஷ் தங்கியிருந்த விடுதியில் உள்ள பிற மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுதியில் வேறு மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கல்லூரித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com