திருப்பதிக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சனிக்கிழமை முதல் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சனிக்கிழமை முதல் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அரக்கோணம் -ரேணிகுண்டா 
ரயில் எண் 05601: அரக்கோணம் -ரேணிகுண்டா இடையிலான சிறப்பு பயணிகள் ரயில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் திருத்தணி, ஏகாம்பரக்குப்பம், புத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரேணிகுண்டா -சென்னை கடற்கரை 
ரயில் எண் 05602: ரேணிகுண்டா - சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரயில் மாலை 5.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த ரயில் புத்தூர், ஏகாம்பரக்குப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிற்கும்.
சென்னை கடற்கரை -அரக்கோணம்
ரயில் எண் 05603: சென்னை கடற்கரை -அரக்கோணம் பயணிகள் சிறப்பு ரயில் தேவைக்கேற்ப இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் அதிவிரைவு பயணிகள் ரயில்
ரயில் எண் 56001: சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் அதிவிரைவு பயணிகள் ரயில் பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com