பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ
பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?

சென்னை: பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலைக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.
  
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தனது தந்தை டி.ஞானசேகரன் என்ற குயில்தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

இதையடுத்து பேரறிவாளனை ஒரு மாத பரோலில் செல்ல மாநில அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு ஆகஸ்ட் 24 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு வந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையிலான போலீஸார், பாதுகாப்புடன் இரவு 8.54 மணிக்கு மத்திய சிறையில் இருந்து காவல் துறை வாகனத்தில் ஜோலார்பேட்டைக்கு பேரறிவாளனை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் நாளை முடிவடையும் நிலையில், பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து உத்தரவு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். 

இதையடுத்து பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து வங்குவது குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டதை அடுத்து பரோல் நாளை முடிவடையும் நிலையில் மேலும் ஒரு மாதம் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டித்துள்ளது தமிழக அரசு.

பரோல் நீட்டிப்பு குறித்து முதல்வர், சட்டத்துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com