டெங்கு காய்ச்சல் மரணத்தை தவிர்க்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் டுவிட்டரில் சாடல்! 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அரசு அகல வேண்டும் என்று நடிகர் 
டெங்கு காய்ச்சல் மரணத்தை தவிர்க்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் டுவிட்டரில் சாடல்! 

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.   

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூறி வருகின்றனர். 

இருப்பினும் மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிஏவி மாணவன் பார்கவ், சென்னை ஐஐடி மாணவர் பிரேம் அவினாஷ், மதுரையைச் சேர்ந்த பிரியா என்ற பெண், வேடசந்தூரில் 2 குழந்தைகள் என டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியாகினர். 

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அரசு அகல வேண்டும் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெங்கு காய்ச்சல் குறித்து நான் முன்னரே எச்சரித்தேன். ஆனால், அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. கோபாலபுரம் டிஏவி பள்ளியைச் சேர்ந்த மாணவன் பார்கவ் டெங்கு காய்ச்சலால் பலியாகியுள்ளார். டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அரசு அகல வேண்டும்.

செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யா அரசு அகல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் பெற்றோர்தான் விழித்திருக்க வேண்டும். இனி நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும். இனி காவலர் நாம்தான். நமது கேள்விக்கான பதில் கிடைக்கும் வரை ஓயக்கூடாது”, என்று தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலைப் பற்றி கமல் தனது ட்விட்டரில் சில வாரங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com