வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி: ஸ்டாலின் கண்டனம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோவை சிங்களவர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோவை சிங்களவர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் வைகோ இன்று இருமுறை பேசினார். அப்போது இலங்கையைச் சேர்ந்த 35 சிங்களவர்கள் வைகோவை சூழ்ந்துகொண்டு தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்களர்களின் செயல்களுக்கு மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, சிங்களர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதற்கு, திமுக சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மனித உரிமைக் கவுன்சிலுக்கு உள்ளேயே, இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது.

இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com