கருணாநிதி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை மாலையில் சந்தித்து உடல் நலம் விசாரித்த கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை மாலையில் சந்தித்து உடல் நலம் விசாரித்த கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கருணாநிதி நலமுடன் இருக்கிறார். அவர் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்பியவர்கள் தண்டிக்கப்படுவர் என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.
கருணாநிதி நலம்: கனிமொழி
 திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது மகளும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி கூறினார்.
சிறப்புக் காவல்படையினர் தயார் நிலையில் இருக்குமாறு டிஜிபி உத்தரவிட்டதாக செவ்வாய்க்கிழமை தகவல் பரவியது. இது வழக்கமான நடைமுறை என்று டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கருணாநிதியின் உடல்நலம் தொடர்பாக தமிழகம் முழுவதும் வதந்தி பரவியது. 
இந்த நிலையில் கனிமொழி, கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாகவும், தேவையற்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினார்.
கோபாலபுரம் இல்லத்தில் இருந்தவாறு கருணாநிதி சுவாசத்தைச் சீராக்குவதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். 
அரசியல் கட்சித் தலைவர்களும் அவ்வப்போது அவரைச் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். 
வதந்தி பரவிய செவ்வாய்க்கிழமையும் கருணாநிதி தனது வழக்கமான பணிகளை வீட்டில் இருந்தவாறே கவனித்தார்.
கருணாநிதியை சந்தித்து அன்பழகன் நலம் விசாரிப்பு
 திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கோபாலபுரம் இல்லத்தில் இருந்தவாறு சுவாசத்தைச் சீராக்குவதற்கான சிகிச்சையை கருணாநிதி பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல் நலம் குறித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து கருணாநிதி ஆரோக்கியமாக இருப்பதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்துக்கு க.அன்பழகன் செவ்வாய்க்கிழமை இரவு சென்றார். 
அங்கு கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com