ஜெயலலிதாவின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சி எடுக்காதது ஏன்?: டிகேஎஸ் இளங்கோவன்

ஜெயலலிதாவின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சி எடுக்காதது ஏன்? என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். 
ஜெயலலிதாவின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சி எடுக்காதது ஏன்?: டிகேஎஸ் இளங்கோவன்

ஜெயலலிதாவின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சி எடுக்காதது ஏன்? என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இடம்பெற்றிப்பதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், மருத்துவ தகவலைப் பார்க்கும் போது ஜெயலலிதாவுக்கு பல உடல்நல பாதிப்புகள் இருந்திருக்கின்றன. 2, 3 நாட்களாக உடல்நலம் பாதித்திருந்த ஜெயலலிதாவை கவனிக்காதது ஏன்?. ஜெயலலிதாவின் சர்க்கரை அளவு 508 எம்ஜி என்பதை கட்டுப்படுத்தாதது ஏன்?. சர்க்கரை அளவை முறையாக கண்காணித்திருந்தால் இந்த அளவுக்கு உடல் பாதித்திருக்காது. 

வீட்டிலேயே பலரும் பரிசோதித்துக் கொள்ளும் வசதி இருக்கும்போது இந்த நிலை ஏன்?.  ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com