நாளை முதல் 4 நாள்களுக்கு வங்கிகள் விடுமுறை

பண்டிகை நாள்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.29) முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாள்களாகும்.
நாளை முதல் 4 நாள்களுக்கு வங்கிகள் விடுமுறை

பண்டிகை நாள்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.29) முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாள்களாகும்.
அனைத்து வங்கிகளும் வியாழக்கிழமை (செப்.28) வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப்.29), விஜயதசமி (சனிக்கிழமை-செப்.30), ஞாயிற்றுக்கிழமை (அக்.1), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நான்கு நாள்களிலும் வங்கிச் சேவை இருக்காது. விடுமுறை நாள்களில் ஒரு வங்கியிலிருந்து பிற வங்கிகளுக்கு பண பரிவர்த்தனைக்கான 'என்இஎஃப்டி' சேவை இருக்காது; எனினும் 'ஐஎம்பிஎஸ்' எனப்படும் உடனடி பண பரிமாற்ற சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பலன் அடையலாம்.
விடுமுறை நாள்களில் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவுக்கு பணம் நிரப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com