காவிரி விவகாரம் காரணமாக 3ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு! 

காவிரி விவகாரம் காரணமாக வரும் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் காரணமாக 3ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு! 

சென்னை: காவிரி விவகாரம் காரணமாக வரும் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சியான திமுக சார்பில், அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிறன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின்  ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு வணிக சங்க பேரமைப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறினார். 

இந்நிலையில் காவிரி விவகாரம் காரணமாக வரும் 3ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'எந்த தனிப்பட்ட லாப நோக்கிற்காகவும் கடையடைப்பு போராட்டம் இல்லை. கடையடைப்பு முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள் மற்றும்  வணிகர்கள் நலன் கருதி எடுக்கப்பட்டது. எனவே ஸ்டாலின் வேண்டுகோ விடுத்திருந்தாலும் திட்டமிட்டப்படி ஏப்ரல் 3-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும்' என்று அவர் தெரிவித்தார்.

அதேசமயம் தமிழநாடு வணிகர்களின் மற்றொரு கூட்டமைப்பான தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை இதே கோரிக்கையினை வலியுறுத்தி ஏப்ரல் 11-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியார்களிடம் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 11-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சியினர் நடத்தும் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை பங்கேற்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com