காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு விசாரணை திங்கட்கிழமை விசாரிக்கப்படும் போது, தமிழக அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய வலுவான வாதங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோரும், சேகர் நாப்தே தலைமையில் வழக்குரைஞர் குழுவும் பங்கேற்றுள்ளனர். 

வழக்குரைஞர்கள் விவரம்
உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதாடும் வழக்குரைஞர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தலைமை வழக்குரைஞர் சுப்ரமணியன் பிரசாத், சேகர் நாப்தே, வழக்குரைஞர்கள் உமாபதி, பரமசிவம், விஜயகுமார், விஜய் நாராயண் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com