கறுப்பு என்பது சர்வதேச மொழி: கவிஞர் வைரமுத்து பெருமிதம்! 

'கறுப்பு என்பது சர்வதேச மொழி' என்று பிரதமர் மோடிக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கறுப்பு என்பது சர்வதேச மொழி: கவிஞர் வைரமுத்து பெருமிதம்! 

சென்னை: 'கறுப்பு என்பது சர்வதேச மொழி' என்று பிரதமர் மோடிக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைத் தொடங்கி வைக்க, வியாழனன்று சென்னை வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக, கடுமையான கறுப்புக்கொடி போராட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் 'கறுப்பு என்பது சர்வதேச மொழி' என்று பிரதமர் மோடிக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

கறுப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும்.  காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு  அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com