போர்க் கப்பல்களைப் பார்வையிட குவிந்த பொதுமக்கள்

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க் கப்பல்களைப் பார்வையிட 10 ஆயிரத்துக்கும்
சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்களை வெள்ளிக்கிழமை பார்வையிட தீவுத் திடலில் திரண்ட பொதுமக்கள்.
சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்களை வெள்ளிக்கிழமை பார்வையிட தீவுத் திடலில் திரண்ட பொதுமக்கள்.

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க் கப்பல்களைப் பார்வையிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை தீவுத் திடலில் வெள்ளிக்கிழமை திரண்டனர். எதிர்பார்ப்பை விட அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகை இருந்ததால் அதிகாரிகள் திணறினர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ராணுவத் தளவாடக் கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு தினமும் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இக்கப்பல்களைப் பார்வையிட பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதியளிக்கப்பட்டது. இதற்காக ஐ.என்.எஸ். சாயாத்ரி, காமோர்டா, சுமித்ரா, ஐராவத் ஆகிய நான்கு கப்பல்கள் வியாழக்கிழமை இரவு சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தன. 
அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள்: சுமார் 5 ஆயிரம் பேர் இந்த கப்பல்களைப் பார்வையிட வருகை தருவர் என்ற எதிர்பார்ப்பு அதிகாரிகளிடம் இருந்தது. ஆனால் தீவுத் திடலில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவியத் தொடங்கினர். அவர்களிடம் அடையாள அட்டை நகல்கள் பெறப்பட்டு, வரிசைப்படி டோக்கன் வழங்கப்பட்டது. 50 பேர் வீதம் பேருந்துகளில் ஏற்றப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பார்வையாளர்களுக்கு தண்ணீர், பிஸ்கட், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அதிக அளவில் பார்வையாளர்கள் வெள்ளிக்கிழமை வருகை தந்ததால், சனிக்கிழமையும் பொதுமக்களைப் பார்வையிட அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இன்றும் பார்வையிடலாம்: வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் மட்டுமே போர்க் கப்பல்களைப் பார்வையிட முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மக்களிடம் உள்ள வரவேற்பைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமையும் போர்க் கப்பல்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com