காவிரி மேலாண்மை வாரியம் சட்டரீதியாக அணுக வேண்டிய விஷயம்: முதல்வர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்டரீதியாக அணுக வேண்டிய விஷயம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 
கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, உடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்.
கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, உடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்டரீதியாக அணுக வேண்டிய விஷயம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 
சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கார் மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் மனுதான் கொடுக்க முடியும். சுட்டுரை, முகநூல் போன்ற சமூக வலைதளங்களை அணுக முடியாது. இது சட்டரீதியாக அணுக வேண்டிய விஷயம். ஒரு பிரதமருக்கு முதலமைச்சர் சார்பில் கோரிக்கை வைக்கும்போது அதை விண்ணப்பம் மூலமாகத்தான் கொடுக்க முடியும் என்றார். 
மேடையில் வைத்து மேலாண்மை வாரியம் தொடர்பாக வலியுறுத்தியிருக்கலாமே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது வலியுறுத்தினோம் என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மே 3-ஆம் தேதிக்குப் பிறகும் மத்திய அரசு காலதாமதம் செய்தால் அதிமுக சார்பில் என்ன மாதிரியான போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டம் உள்ளது என்ற கேள்விக்கு, உச்ச நீதிமன்றம்தான் அதிகாரம் படைத்த அமைப்பு. மே 3- க்குள் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு இருக்கும்போது கற்பனைக் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்றார். 
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் டிடிவி அணியினர் இரட்டை இலையைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது கற்பனையான ஒன்று. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே நீதிபதிகள் தான் பதில்கூற வேண்டும் என்றார். ஜெயலலிதா குறித்து ராமமோகன ராவ் கூறியது பற்றிய கேள்விக்கு, யாரையோ தப்பிக்க வைக்க அவர் இவ்வாறு கூறுகிறார் என்றார். 
இந்த சந்திப்பின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை ஏ.சண்முகம் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com