ஜி சாட்-29 செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் கே. சிவன்

அதிவேக இணையதள சேவை பயன்பாட்டுக்காக ஜி சாட்-29 செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
ஜி சாட்-29 செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் கே. சிவன்

அதிவேக இணையதள சேவை பயன்பாட்டுக்காக ஜி சாட்-29 செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி அருகிலுள்ள இந்திய கடற்படை மையத்தில், தமிழகத்திலேயே முதலாவதாக செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மையம் ரூ. 82 கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அடிக்கல் நாட்டிய பிறகு கே. சிவன், செய்தியாளர்களிடம் கூறியது: செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மையம், வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. 
தென்மாநிலங்களிலும் இச்சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழகத்திலேயே முதலாவதாக திருநெல்வேலியில் இந்த தகவல் சேகரிப்பு மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவுபெற்று செயல்படத் தொடங்கும்போது இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அடுத்தகட்டமாக அதிவேக இணையதள தகவல் தொடர்புக்காகவும், கிராம மக்களுக்கும் இந்த சேவை கிடைக்கும் வகையில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஜி சாட் 29 செயற்கைக்கோள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த செயற்கைக்கோள் ஏவப்படும்.
சந்திரயான்-2 விண்கலம் நிகழாண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும். அதற்கான பல்வேறு கட்டச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சந்திரயான்-2 விண்கலத்தில் தானாக இயங்கும் ரோபோ அனுப்பப்படும். இந்த ரோபோ விண்ணில் சேகரிக்கும் மண்ணை ஆய்வு செய்து அதன் முடிவுகளை உடனுக்குடன் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும். 
அதிநவீன தொலைத்தொடர்பு சேவைக்காக ஜி சாட் 6 ஏ செயற்கைக்கோள் கடந்த மார்ச் 28 இல் விண்ணில் ஏவப்பட்டது. கட்டுப்பாட்டு மையத்துடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் செயலிழக்கவில்லை. அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com