பூஜையில் வைத்த எலுமிச்சை ரூ.6800- க்கு ஏலம்

சிவகிரியை அடுத்துள்ள  கொல்லன்கோவில் கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயிலில் சுவாமிக்கு பூஜையில் வைத்த எலுமிச்சைப் பழம் ரூ.6800-க்கு ஏலம் போனது.
பூஜையில் வைத்த எலுமிச்சை ரூ.6800- க்கு ஏலம்

சிவகிரியை அடுத்துள்ள  கொல்லன்கோவில் கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயிலில் சுவாமிக்கு பூஜையில் வைத்த எலுமிச்சைப் பழம் ரூ.6800-க்கு ஏலம் போனது.

தமிழ்ப் புத்தாண்டு தினமான சனிக்கிழமை இக் கோயிலில்சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

சித்திரைக் கனி திருவிழா என்பதால் சடையப்ப சுவாமி முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழம் ஏலம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதில், முதலாவதாக ஒரு எலுமிச்சை ரூ. 6800- க்கும் , இரண்டாவதாக ரூ.3600 -க்கும், மூன்றாவதாக ரூ.3000- க்கும் ஏலத்தில் போனது.

மேலும், அன்னதானத்துக்குப் பயன்படுத்தியது போக மீதமான காய்கனிகள் மற்றும் சமையல் பொருள்கள் ஏலம் விடபட்டன. இதில் 50 கிராம் எடை கொண்ட மஞ்சள் தூள் ரூ. 600 -க்கும், உப்பு ஒரு கிலோ ரூ. 1000 -க்கும் பக்தர்கள் வாங்கி சென்றார்கள், இவ்வாறு கோயிலில் இருந்து சுவாமி பூஜையில் வைக்கப்பட்ட பூஜைப் பொருள்களை வாங்கிச் செல்வது வாழ்க்கை முழுவதும் நன்மை தரும் என்பது அப் பகுதி பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com