ரஜினிகாந்த் கர்நாடகா காவியின் தூதுவர்: காய்ச்சி எடுத்த பாரதிராஜா! 

ரஜினிகாந்த் தமிழர் அல்ல; கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது என்று இயக்குநர் பாரதிராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கர்நாடகா காவியின் தூதுவர்: காய்ச்சி எடுத்த பாரதிராஜா! 

சென்னை: ரஜினிகாந்த் தமிழர் அல்ல; கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது என்று இயக்குநர் பாரதிராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்த தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 'நாம் தமிழர்' அமைப்பின் தொண்டர் ஒருவரால் போலீசார் தாக்கப்பட்டனர்.

அதற்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதற்கு பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தமிழர் அல்ல; கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது என்று இயக்குநர் பாரதிராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?; அறவழியில் போராடியவர்கள் வன்முறையாளர்களா?

தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது. ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது.

இலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்? தமிழர்களுள் ரஜினிகாந்த் சிண்டு  முடிய வேண்டாம்.

நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் போராடினீர்களா? மீத்தேன் பற்றி வாய் திறந்தீர்களா? இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா?:

படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினி போன்றோரை சந்தித்ததே இல்லை. காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது, வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம்.

தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள். உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது.

இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com