அவதூறு வழக்கு: டிடிவி தினகரன் ஆஜர்

தமிழக அமைச்சர்களை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்காக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் திங்கள்கிழமை ஆஜரானார். 
அவதூறு வழக்கு: டிடிவி தினகரன் ஆஜர்

தமிழக அமைச்சர்களை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்காக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் திங்கள்கிழமை ஆஜரானார். 
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன், கடந்த பிப்ரவரி மாதம் 27 -ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழக அமைச்சர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதையடுத்து டிடிவி தினகரன் மீது தமிழக முதலவர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். 
தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் நகல்களை வழங்கும்படி, தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு நகல்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 28 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்ற பிறகு தொடரப்பட்ட முதல் அவதூறு வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்படி எதிர்கொள்வேன்: நீதிமன்ற வளாகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியது: 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது குறித்து பேசியதை வைத்து இந்த அவதூறு வழக்கு என் மீது தொடரப்பட்டுள்ளது. 
இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ராம் மோகன ராவ், விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ள கருத்துகளால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com