காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம்: தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை- முதல்வர் அறிவிப்பு

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம்: தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை- முதல்வர் அறிவிப்பு

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், தொடர்புடைய வீரர்களுக்கு வாழ்த்துக் கடிதங்களையும் அவர் திங்கள்கிழமை அனுப்பியுள்ளார்.
அதன் விவரம்:-
மேசைப் பந்து வீரர் சத்தியன்: காமன்வெல்த் போட்டியில் மேசை பந்து விளையாட்டில் கலப்பு இரட்டையர் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளீர்கள். காமன்வெல்த் போன்ற சர்வதேசப் போட்டிகளில் தங்கம் வெல்வோருக்கு ரூ.50 லட்சமும், வெள்ளிப் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 லட்சமும், வெண்கலம் பெறுவோருக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, தாங்கள் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றதால் ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை பெறத் தகுதி படைத்துள்ளீர்கள். மேலும் பல வெற்றிகளைக் 
குவித்து நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
மேசைப் பந்து வீரர் சரத்கமல்: ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளீர்கள். எனவே, தாங்கள் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை பெறத் தகுதி படைத்துள்ளீர்கள்.
ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா கார்த்திக்: ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளியும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்று ரூ.60 லட்சம் உயரிய ஊக்கத் தொகை பெற தகுதி பெற்றுள்ளீர்கள்.
ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல்: கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று ரூ.30 லட்சம் பெற தகுதி பெற்றுள்ளீர்கள்.
ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா: மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்று ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை பெற தகுதி படைத்துள்ளீர்கள் என பதக்கம் பெற்றோருக்கு தனித்தனியே வாழ்த்துக் கடிதங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com