சிறுமிகள் கொடூரக் கொலை: ராமதாஸ் கண்டனம்

ஜம்மு காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபாவுக்கு நடந்த கொடுமை மனிதாபிமானம் கொண்டவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதது. அந்தச் சிறுமியைக் கடத்தி 8 நாள்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, அதன் பின்னர் படுகொலை செய்து புதரில் வீசியுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள் ஆவர். 
இந்தச் சோகம் மறைவதற்கு முன்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து, உடலை வீசி எறிந்து விட்டு, கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். தமிழகத்திலும் மனிதத்தன்மைக்கு ஒவ்வாத வகையில் பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது. 
இத்தகையக் குற்றங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகளைச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மாதத்துக்குள் விசாரித்து, அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இதை எதிர்த்து எங்கு மேல்முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டால், அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவதுதான் இத்தகைய குற்றங்கள் குறைய வகை செய்யும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com