தங்கம் பவுனுக்கு ரூ.136 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.23, 800-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.23, 800-க்கு விற்பனையானது.
உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, நஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.17 குறைந்து, ரூ.2,975-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், வெள்ளிவிலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ.42 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.42,000 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி):
1 கிராம் தங்கம் 2,975
1 பவுன் தங்கம் 23,800
1 கிராம் வெள்ளி 42.00
1 கிலோ வெள்ளி 42,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com