தாமதமாகப் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள்: ஊதியத்தை பிடித்தம் செய்ய புதுவை முதல்வர் உத்தரவு

புதுவை தலைமைச் செயலகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்கு காலதாமதமாக வந்த ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்ய உத்தரவிட்டார்.
தாமதமாகப் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள்: ஊதியத்தை பிடித்தம் செய்ய புதுவை முதல்வர் உத்தரவு

புதுவை தலைமைச் செயலகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்கு காலதாமதமாக வந்த ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்ய உத்தரவிட்டார்.
புதுவை தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு திடீரென வந்தார். அப்போது பெரும்பாலான ஊழியர்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. அங்குள்ள பயோமெட்ரிக் கருவியை சோதனையிட்ட போது அது நீண்ட காலமாக பழுதடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
பெரும்பாலான அலுவலகங்களில் அலுவலக உதவியாளர்கள் மட்டுமே இருந்தனர். செயலர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள், அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை. வருகைப் பதிவேடும் முறையாக பராமரிக்கப்படவில்லை.
ஊழியர்கள் இல்லாதது குறித்து முதல்வர் விசாரித்ததற்கு, அவர்கள் விடுமுறை எடுத்துள்ளதாகக் கூறினர். இதனால், கோபமடைந்த முதல்வர் தவறை மறைக்க மீண்டும் தவறு செய்ய வேண்டாம் என்று கண்டித்தார்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
புதுவையில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை எனப் புகார்கள் வந்தன. தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த போது 70 சதவீத ஊழியர்கள் பணிக்கு உரிய நேரத்தில் வரவில்லை.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலர், சம்பந்தப்பட்ட துறைச் செயலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்றியுள்ளேன். அரசு ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
தாமதமாக பணிக்கு வரும் அரசு ஊழியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்யவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்.
அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com