10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு சற்று கடினம்

10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு சற்று கடினம்

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாகவும், சில வினாக்கள் பாடப் பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். 

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாகவும், சில வினாக்கள் பாடப் பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்களுக்கு கணிதத் தேர்வு முடிவடைந்ததும் ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் அறிவியல் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்தத் தேர்வு குறித்து சென்னையைச் சேர்ந்த கே.சௌந்தர்யா, டி.சண்முகம், ரா.அன்புச்செல்வன் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கூறியது: அறிவியல் பாடத்துக்கு செய்முறை, அகமதிப்பீடு ஆகியவற்றுக்கு 25 மதிப்பெண்களுக்கான தேர்வுகள் ஏற்கெனவே முடிவடைந்து விட்டதால், 15 ஒரு மதிப்பெண், 20 இரண்டு மதிப்பெண், நான்கு 5 மதிப்பெண் வினாக்கள் என மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. 
ஒரு மதிப்பெண் பகுதியில் 3 கேள்விகள் தவிர எஞ்சிய வினாக்கள் எளிமையாக இருந்தன. இரண்டு மதிப்பெண் பகுதியில் 25, 26, 29, 39, 41 ஆகிய ஐந்து வினாக்கள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. 5 மதிப்பெண் பகுதியில் இடம் பெற்றிருந்த நான்கு வினாக்களில் மூன்று வினாக்கள் எளிதாக இருந்தன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அறிவியல் வினாத்தாளில் சில எளிமையான வினாக்களும், சில கடினமான வினாக்களும் இடம்பெற்றிருந்தன. எனினும் இதில் 85 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர். 
இது குறித்து சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியை எஸ்.கவிதா கூறுகையில், கணித வினாத்தாளுடன் ஒப்பிடுகையில் அறிவியல் வினாத்தாள் ஒரளவுக்கு எளிதாக இருந்தது. 
ஆனால் 100-க்கு 100 மதிப்பெண் பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்த மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த வினாக்கள் சற்று சவாலாக இருந்திருக்கும். அதே நேரத்தில் வரைபடம் உள்ளிட்ட நெடு வினாக்கள் எளிதாக இருந்ததால் மெதுவாக கற்கும் மாணவர்களால்கூட 60 மதிப்பெண்களுக்கும் மேல் பெற முடியும். 
எனினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அறிவியலில் 'சென்டம்' பெறும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com