கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: மேலும் ஒருவர் கைது

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்குத் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்குத் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வு நடைபெற்றது. இத் தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், கடந்த நவம்பர் 7 -ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா, சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் டிசம்பர் மாதம் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், தேர்வில் முறைகேடு செய்த 156 பேர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்; ஒருவர் சரணடைந்திருந்தார். இவர்களில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த முறைகேட்டில் தரகராக செயல்பட்ட, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பி. சுப்பிரமணி (49) என்பவரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com