காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசிடம் செயல் திட்டத்தை கேட்டிருக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசிடம் செயல் திட்டத்தை கேட்டிருக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குரிய செயல் திட்டம், அதற்கான விளக்கம் ஆகியவை குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும் என்று அம்மா மக்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குரிய செயல் திட்டம், அதற்கான விளக்கம் ஆகியவை குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது. அது, ஸ்டெர்லைட் ஆலையாக இருந்தாலும் சரி; மீத்தேன் எரிவாயு, நியூட்ரினோ திட்டம் போன்றவையானாலும் சரி. அவற்றை மக்கள் விரும்பாததால்தான் அங்கு போராட்டம் நடக்கிறது. பெண் நிருபரிடம் ஆளுநர் நடந்து கொண்ட முறை தவறானது. பாலியல் பேர வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால் தான் உண்மை வெளியே வரும். 
தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்குவதாகக் கூறுவது மத்திய அரசு கூறி செய்யும் வேலை. மாறாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குரிய செயல் திட்டம், அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும். மக்களை ஏமாற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்தில் ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் கொண்டு வர சிலர் முயற்சிக்கிறார்கள். அதை கொண்டு வந்தால் நீதிமன்றத்திற்குச் செல்வோம் என்றார் தினகரன். 
பேட்டியின்போது முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளருமான வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com