லோக் ஆயுக்த குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு

லோக் ஆயுக்த அமைப்பது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
லோக் ஆயுக்த குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு

லோக் ஆயுக்த அமைப்பது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
மு.க.ஸ்டாலின்: இந்தியாவின் பல மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து, சட்டப் பேரவையில் பலமுறை கேள்வியெழுப்பிய போதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை உச்ச நீதிமன்றம் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இனியாவது, லோக் ஆயுக்த அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்பு உருவாக்கப்படாமல் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் லோக் ஆயுக்த அமைக்கப்பட்டு அறிக்கை தருமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இனியாவது உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
ராமதாஸ் (பாமக): தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்த அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை செய்யவுள்ளது. திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் லோக் அயுக்த சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்' என்று தமிழக ஆட்சியாளர்கள் காரணம் கூறி தாமதித்து வந்தனர். மாநில அளவில் லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்துவதற்கும், அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியாவது திருந்த வேண்டும். 
கமல்ஹாசன் (மநீம): உச்ச நீதிமன்றத்துக்கு தமிழகத்தில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்த.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com