உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3.5 லட்சம் கோடி தேவை: உள்துறை அமைச்சர் தகவல்

2020 - 25-ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3.5 லட்சம் கோடி தேவை
உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3.5 லட்சம் கோடி தேவை: உள்துறை அமைச்சர் தகவல்

புதுதில்லி: 2020 - 25-ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3.5 லட்சம் கோடி தேவை என 15-வது நிதி ஆணையத்திடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 

உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறையை நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு வரும் 2020 - 25-ஆம் ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு, மத்திய ஆயுதக் காவல் படை, காவல்துறை நவீனமயமாக்கல், எல்லை பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் யூனியன் பிரதேசங்கள் பாதுகாப்பு போன்ற துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காகவும் ரூ.3.5 லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாக 15-து நிதி ஆணையத் தலைவர் என்.கே.சிங்கிடம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்று விரைவில் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

உள்துறை அமைச்சகம் பொது மக்களிடையே பாதுகாப்பு உணர்வுகளை மேம்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பது, சைபர் குற்றங்களை சந்தித்தல், இயற்கை பேரழிவுகளில் உடனடி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு கொண்டுவருதல் போன்ற ஏனைய சவால்களை எதிர்கொள்கிறது.

போலீஸ் துறை, குடியேற்றம், விசா, வெளிநாட்டவர் பதிவு மற்றும் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பு, எல்லை கட்டுமானம், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட துறைகளை நவீனப்படுத்துவதற்கான தொடர் மூலதன செலவு குறித்தும் நிதி ஆணையத்திடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச தொடர்புடைய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு மாநிலங்களால் தனியே நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் மத்திய மற்றும் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் மட்டுமே ஒட்டுமொத்த பாதுகாப்பில் நிலையான முன்னேற்றம் காணப்பட முடியும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com